"இயற்கை தாய் அளித்துள்ள தற்காப்புத் திறன் "எல்லா உயிரினங்களுக்கும், தங்கள் உடலில் நோய்களை தோற்றுவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria) மற்றும் நச்சுயிரிகளுக்கு (Virus) எதிராக மட்டுமே நோய் எதிர்ப்பு புரதத்தை (Antibodies) உடலில் உற்பத்தி செய்து தங்களை காத்து கொள்ள முடியும்.
ஆனால், தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக, எந்த உயிரினத்தாலும் நோய் எதிர்ப்பு புரதத்தை உடலில் உற்பத்தி செய்து, சாவிலிருந்து தன்னை காத்து கொள்ள முடியாது. இந்த நியதிக்கு, விதி விலக்காக, மூன்று தாவரங்களின் நஞ்சுகளுக்கு எதிராக மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு புரதத்தை உற்பத்தி செய்ய, இயற்கை வழி வகுத்துள்ளது.
அந்த மூன்று தாவரங்களில் ஆமணக்கும் ஒன்றாகும்.
மற்ற மாவட்ட விவசாயிகள் போல, காவிரியின் கடை மடை பகுதியிலுள்ள விவசாயிகள் ஆமணக்கை பணப் பயிராக பயிரிடுவதில்லை. அனால், சிலர் ஓரிரு செடிகளை மட்டும் தங்கள் தோட்டங்களில் வளர்ப்பது அல்லது வளர விடுவது உண்டு.
புஞ்சை பயிர் அதிகம் பயிராகும் வானம் பார்த்த பூமியை கொண்டுள்ள மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஆமணக்கு செடிகளை தங்கள் நிலத்தை சுற்றி, வரப்பு ஓரங்களில், இலாப நோக்கோடு பயிரிடுவார்க
ள். ஆமணக்கு இலைகளில் ரெசின் என்ற நஞ்சு அதிக அளவில் இருக்கும் என்பதை நாம் முன்பே கண்டோம். ஆகவே, நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க வரும் பூச்சிகள், வரப்பு ஓரம் உள்ள ஆமணக்கு இலைகளை முதலில் தின்று, இறந்துவிடுவதால், நிலத்தில் பயிரிடப்படும் மற்
ற பயிர்கள், பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றன. இந்த இயற்கை முறை விவசாயத்தால், உயிர்கொல்லி (Pesticide) மருந்துக்கு செலவு செய்யாமலே, விவசாயிகள் அதிக இலாபம் ஈ
ட்ட முடியும்.
எங்கள் மாவட்டத்தில் (தென்னார்க்காடு) இந்த இயற்கை முறை விவசாயத்தை அப்போது எல்லோரும் கடை பிடித்தார்கள். இந்த நிலங்களில் மேய வரும் ஆடுகள் முதலில் வரப்பு ஓரங்களில் ஓரிரு ஆமணக்கு இலைகளை தின்ற உடனேயே, காவலில் இருப்போரால் விரட்டி அடிக்கப்படும்.
அதனால், அவை அதிக அளவு இலைகளை உண்ணும் வாய்ப்பை இழப்பதால், அவை இறந்து விடாமல் தப்பித்துவிடும். அதே நேரத்தில் சிறிது அளவு இலைகளை தின்ற ஆட்டின் உடலில் ரெசின் நஞ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பு புரதம் உற்பத்தியாகிறது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நேர்வதால், எண்கள் பகுதியில் உள்ள ஆடுகளின் உடலில் தேவையான அளவு ரெசின் நஞ்சை முறிக்கும் எதிர் புரதம் உற்பத்தி ஆவதால், அதிக இலைகளை தின்ன நேர்ந்தாலும், ஆடுகள் இறந்து விடாமல் இயற்கை காப்பாற்றுகிறது.
ஆமணக்கை பயிரிடாத, காவிரி கடைமடை பகுதியில் வாழும் ஆடுகளுக்கு, ஆமணக்கு இலையை தின்னும் வாய்ப்பு இருப்பதில்லை. ஆகையால், அவற்றின் உடலில் ரெசின் நஞ்சை முறிக்கும் நோய் எதிர்ப்பு புரதம் இயற்கையில் இருப்பதில்லை. சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள ஆமணக்கின் கிளைகளை வெட்டி பாதை ஓரங்களில் எறிவதுண்டு. அவ்வாறு எறியப்படும் கிளைகளில் உள்ள இலைகளை அப்பாதை வழியே செல்லும் அப்பகுதி வாழ் ஆடுகள் வயிறு நிறைய தின்றால், அவை இறந்துவிடும்.
இந்த நஞ்சை முறிக்க, மனிதனின் ரத்த ஜன்னி நோயை (Tetanus) குணப்படுத்த, குதிரையில் இருந்து ஊனீர் (Serum) தயார் செய்வது போல, ஆமணக்கு இலைகளை சிறிது அளவில், பல நாட்கள் ஆட்டுக்கு கொடுத்து, போதுமான அளவு நோய் எதிர்ப்பு புரதம் அதன் உடலில் உற்பத்தி ஆனா பின், அதன் ஊநீரை எடுத்து, பாதிக்கப்பட்ட ஆட்டுக்கு கொடுத்தால்தான், அதை காப்பாற்ற முடியும். இந்த மருந்தின் தேவை மிக குறைவு என்பதாலும், இதை தயாரிக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்பதாலும், இலாப நோக்கு கொண்ட எந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமும் நம் நாட்டில் இதை தயார் செய்ய முன்வராது. இந்த மருந்து இல்லாமல் ஆமணக்கு இலையை தின்னும் தஞ்சை மாவட்ட ஆடுகளை இன்றும் யாராலும் காப்பற்ற முடியாது.
ஆனாலும், இலையை உண்ட உடனேயே, வேறு சில மருத்துவ முறைகளை கடை பிடித்து, தீவிர சிகிச்சை அளித்தால், ஆட்டை காப்பற்ற முடியும். அனால், அதற்கு, அனுபவம் நிறைந்த கால்நடை மருத்துவரும், எல்லா வசதிகளும் கொண்ட கால்நடை மருத்துவ மனையும், மருத்துவரோடு முழு மனதோடு ஒத்துழைக்கும் ஆட்டு உரிமையாளரும் தேவை.
சென்னை பல்கலைகழகத்தில் கால்நடை மருத்துவ பட்டம் பெற்ற எனக்கு,
(1) ஏன் அன்று இந்த விபரங்கள் தெரியாமல் போயிற்று?
(2) ஏன் இன்றும் எல்லா கால்நடை மருத்துவமனைகளிலும், இதற்கு மருத்துவம் செய்ய முடியவில்லை?
இதற்கான விளக்கத்தை எனது அடுத்த இடுகைகளில் எழுதுகிறேன்.