Wednesday, April 29, 2009

எனது எண்ணங்கள்


வலைப்பதிவில் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதுமாறு பல நண்பர்கள் கூறிவந்தனர். தொடர்ந்து எழுத நேரமின்மையலும், என்னுடைய அனுபவங்கள் ஒரு குறுகிய வட்டத்திலுள்ள ஒரு சிலரே ஆர்வத்துடன் படிப்பார்கள் என்பதாலும், எழுத தயங்கினேன். எனது "கால்நடைமருத்துவனின் காலடிச்சுவடு " என்ற புத்தகத்தை படித்த பல நண்பர்கள் எனது அனுபவங்களையும், எண்ணங்களையும், கட்டாயம் பதிவு செய்யுமாறு வேண்டினர். தஞ்சை மாவட்டத்தில் கால்நடைமருத்துவனாக வாழ்க்கையை தொடங்கி, பல்கலைகழக துணைவேந்தராக ஓய்வு பெற்ற, நான் எனது வாழ்வில் சந்தித்த பல நிகழ்வுகள் பற்றியும், அதனுடன் சம்பந்தபட்ட பல விதமான மனிதர்கள் பற்றியும், எனது எண்ண ஓட்டங்களை எனது இடுகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி யுள்ளேன்.

எனது தொழில்துறையின் வளர்ச்சிக்காக எனது ஆக்கபூர்வமான மாற்று கருத்துக்களையும், கால்நடைகள் பற்றிய சில அறிவியல் உண்மைகளையும், தெரிவிப்பதே எனது நோக்கம்.